நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
PUBLISHED ON : ஜூன் 01, 2025 12:00 AM

மருத்துவமனை ஒன்றில், கணவனும், மனைவியும் அவசர சிகிச்சை பெற, ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்வதற்காக பெட்டில் இருக்கின்றனர்,அந்த நிலையிலும் தன் மனைவியின் கைபிடித்து கணவன் ஆறுதல் சொல்கிறான், மனதைத் தொடும் இது போன்ற பல படங்கள் சென்னையில் நடந்துவரும் புகைப்படக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
சென்னையில்,போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் சர்வதேச அளவிலான புகைப்படக் கண்காட்சி கீரிம்ஸ் ரோட்டில் உள்ள லலித்கலா அகாடமியில் நடந்து வருகிறது. கண்காட்சியை திரைப்பட ஒளிப்பதிவாளர் சேதுமாதவன் துவக்கிவைத்தார். இந்த கண்காட்சியில் உலகம் முழுவதும் உள்ள புகைப்படக்கலைஞர்கள் எடுத்த சிறந்த படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.