PUBLISHED ON : ஆக 25, 2026 07:59 PM

சத்தீஸ்கர் மாநிலத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பஸ்தர் மாவட்டம், ஜெகதல்பூரில் நேற்று வழக்கத்தை விடவும் கூடுதல் களைகட்டியிருந்தது. காரணம், இந்துக்களின் மிகப்பனிதமான 'ஸ்ராவண்' (ஆவணி) மாதத்தின் கடைசிச் சோமவாரம்!



ஜெகதல்பூரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த பிரம்மாண்ட ஆன்மீக ஊர்வலத்தில், வழிநெடுகிலும் மக்கள் மலர்களைத் தூவி வரவேற்பளித்தனர். சத்தீஸ்கரின் மண்ணில் ஒடிசாவின் கலைச் சிறப்பு சங்கமித்த இந்த நிகழ்வு, எல்லைகளைக் கடந்த பக்தியின் உன்னதத்தை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்தது!
ஆவணி மாதத்தின் நிறைவு நாளில், பூதேஷ்வர் மகாதேவனின் அருள் பெறத் திரண்ட மக்களால் பஸ்தர் பிராந்தியமே நேற்று ஆன்மீகக் கடலில் மூழ்கித் திளைத்தது.
