PUBLISHED ON : ஜூன் 12, 2025 12:00 AM

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னையை தீர்க்கும் நவீன உபகரணங்கள்



நமக்கு சாப்பிடுவதும் தண்ணீர் அருந்துவதும் நடப்பதும் சாதாரண விஷயம் ஆனால் கால் கை இழந்தவர்களுக்கு அது அசாதாரணம்.தட்டில் இருக்கும் உணவை செயற்கை கை உபயோகித்து எடுத்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டால் கூட அது சாதனைதான்.
இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை எளிமைப்படுத்தும் விதமாக ரிஷி கிருஷ்ணா பல உபகரணங்களை கண்டுபிடித்துள்ளார் இவரே ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் தனது தேவையே மற்றவர்கள் சேவை, என்பதை உணர்ந்து கண்டுபிடித்துள்ளார்.
சக்கர நாற்காலி உபயோகிப்பவர்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது சிரமம் அந்த சிரமத்தை குறைக்கும் விதத்தில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கக்கூடிய சக்கரநாற்காலி வந்துள்ளது.
மனவளர்ச்சி குறைந்த குழந்தைகள் தாங்களே தயாரித்த சுற்றுச் சுழலுக்கு ஏற்ற கீசெயின் பர்ஸ் போன்றவைகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
பிரெய்லி முறையில் வேகமாக எழுதுவதற்கான சாதனம்,எதிரே தென்படும் பொருளை பற்றி சொல்லி எச்சரிக்கும் கண்கண்ணாடி,வித்தியாசமான விளயைாட்டுப் பொருட்கள் என்று பல விஷயங்கள் இடம் பெற்றிருந்தன.
மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கையை முடிந்தவரை எளிதாக மாற்றியமைக்கும் விதத்தில் வந்துள்ளள இந்த உபகரணங்களின் கண்காட்சி விடுமுறை நாட்களில் நடக்கவேண்டும் கூடுதல் நாட்கள் நடக்கவேண்டும், எல்லா ஊர்களிலும் நடக்கவேண்டும் .
-எல்.முருகராஜ்

