UPDATED : ஆக 02, 2026 06:03 AM
ADDED : ஆக 02, 2026 04:57 AM

“கேமரா லென்ஸ் மட்டும் இல்ல… மனசையும் ஓபன் பண்ணணும்!”
— இந்த டயலாக்குக்கு உயிர் கொடுப்பது போல, கோவையில் வார இறுதிகளை அர்த்தமுள்ள நினைவுகளாக மாற்றி வருகிறது, நந்தகுமார் தொடங்கியுள்ள Photo Walk முயற்சி.
என்ஜினியரிங் படித்திருந்தாலும், புகைப்படக்கலையின் மீது இருந்த ஆர்வத்தால், இந்த Photo Walk-ஐ தொடங்கியுள்ளார் நந்தகுமார்.
“இது போட்டோ எடுக்க மட்டும் இல்லை… மனிதர்களை மனிதர்களோடு மீண்டும் இணைக்கும் ஒரு பயணம்” என்கிறார்.
இன்றைய டிஜிட்டல் உலகில் ஆயிரக்கணக்கான Followers இருந்தாலும், மனம் திறந்து பேச ஒரு நண்பர் இல்லாத நிலை பலருக்கு உள்ளது.
அந்த தனிமையை உடைத்து, புதிய நண்பர்கள், புதிய அனுபவங்கள், புதிய பார்வைகளை உருவாக்கும் தளமாக இந்த Photo Walk மாறி வருகிறது.
வார இறுதிகளில் கோவையின் பல்வேறு இடங்களுக்கு சென்று Candid Photography, Street Photography, Portrait, Traditional Theme, Nature, Architecture, Lifestyle என பல விதமான புகைப்படங்களை எடுக்கின்றனர்.
இதில் புகைப்படக் கலைஞர்கள் மட்டுமல்ல… IT ஊழியர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள், மருத்துவர்கள் என பல துறையை சேர்ந்தவர்களும் ஆர்வமாக பங்கேற்கின்றனர்.
சிறப்பம்சம் என்னவென்றால், DSLR கேமரா இருந்தால்தான் வர வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. கையில் ஒரு மொபைல் போன் இருந்தாலே போதும்!
ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு கதை இருக்கிறது. அந்த கதைகளை புகைப்படமாக பதிவு செய்வதுதான், போட்டோ வாக்கின் சுவாரஸ்யம்.
ஒரு பிரேமில் சிரிப்பையும், இன்னொரு பிரேமில் வாழ்க்கையையும் சேமிக்கும் அனுபவமாக இது மாறியுள்ளது.
போட்டோவாக் மூலம் புகைப்பட திறமை வளர்வதோடு மட்டுமல்லாமல், புதிய தொழில் வாய்ப்புகள், Business Contacts, Creative Collaborations, Networking, Event Opportunities என பல கதவுகளும் திறக்கப்படுகின்றன.
பலர் தங்கள் முதல் Paid Photography Project-ஐ கூட இதுபோன்ற சந்திப்புகள் மூலமே பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.
வாரம் முழுவதும் வேலை, அழுத்தம், மொபைல் ஸ்கிரீன் என சுழலும் வாழ்க்கையில், ஞாயிறு காலை சில மணி நேரமாவது இயற்கையோடும், கலை ஆர்வலர்களோடும், புதிய நண்பர்களோடும் செலவிட விரும்பும் கோவை இளைஞர்களுக்கு, போட்டோவாக் புதிய அடையாளமாக உருவெடுத்து வருகிறது.
“நல்ல போட்டோவை விட… அந்த போட்டோ எடுக்கும்போது கிடைக்கும் அனுபவம்தான் நீண்ட காலம் நினைவில் தங்கும்” என்பதை, இந்த முயற்சி அழகாக உணர்த்துகிறது.
-ச. பிரவீணா
வாரம் முழுவதும் வேலை, அழுத்தம், மொபைல் ஸ்கிரீன் என சுழலும் வாழ்க்கையில், ஞாயிறு காலை சில மணி நேரமாவது இயற்கையோடும், கலை ஆர்வலர்களோடும், புதிய நண்பர்களோடும் செலவிட விரும்பும் கோவை இளைஞர்களுக்கு, போட்டோவாக் புதிய அடையாளமாக உருவெடுத்து வருகிறது.
