Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/விருந்தினர் பகுதி/  தேநீர் கோப்பையில் வழிகிறது கவிதை!

  தேநீர் கோப்பையில் வழிகிறது கவிதை!

  தேநீர் கோப்பையில் வழிகிறது கவிதை!

1


ADDED : ஏப் 05, 2026 06:12 AM

Follow on Google

ADDED : ஏப் 05, 2026 06:12 AM

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உ ப்பிலிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் முத்தையா மோகன். இவர் வீட்டில் டீ, காபி தயாரித்து அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் அலுவலக பணியாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.

இவர் டீ விற்பவர் மட்டுல்ல, 8 புத்தகங்கள் எழுதியிருக்கும் எழுத்தாளர் என்பது பலரும் அறியாதது!

விடுமுறை நாட்களை இலக்கியத்துக்காக ஓதுக்கி விடும் இவர், இதுவரை ஆறு கவிதை நுால்கள், ஒரு கட்டுரை நுால், ஒது சிறுகதை நுால் என, எட்டு நுால்களை எழுதி இருக்கிறார். பல இலக்கிய அமைப்புகளின் விருதுகள் கிடைத்துள்ளன.

கையில் தேநீர் கேனையும், மனதில் கவிதைகளையும் சுமந்து கொண்டு அலுவலக படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் கவிஞர் முத்தையா மோகனிடம் பேசினோம்.

''முதல்ல ஒரு கப் டீ டேஸ்ட் பண்ணுங்க,'' என்று கூறியபடி சுடச்சுட ஒரு கப் டீ ஊற்றித்தந்தார்.

''எனக்கு சொந்த ஊர் விழுப்புரம். கோவைக்கு வந்து 20 வருடங்களாகி விட்டன. ஆரம்பத்தில் கட்டட வேலை செய்தேன். சரிப்பட்டு வரவில்லை. டீ வியாபாரத்தை துவங்கினேன். செலவு போக தினமும், 600 ரூபாய் கிடைக்கிறது,''

''இலக்கிய ஆர்வம்?''

''நான் 6ம் வகுப்பு வரைதான் படித்தேன். நிறைய படிக்க ஆசை. குடும்ப வறுமை விடவில்லை. படிப்பு மேல் இருந்த ஆசையில்தான் புத்தகங்கள் படிக்க துவங்கினேன். அதுதான் எழுதும் ஆர்வத்தை துாண்டியது.

இதுதான் கவிதை, கதை என்று இலக்கணம் வகுத்துக்கொண்டு எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எழுத்து இந்த சமூகத்துக்கு பயன்பட வேண்டும். என் மனதில் தோன்றும் எண்ணங்களையும், மனதை பாதிக்கும் விஷயங்களையும் எழுதுகிறேன்,'' என்கிறார் முத்தையா மோகன்.

மனதை பாதிக்கும்

விஷயம் ஏதாவது?



''மனிதர்களின் செயற்கையான சிந்தனையால் இயற்கையும், சுற்றுச்சூழலும் சீரழிக்கப்படுகிறது. இதற்கு எதிரான கண்டன குரலை, கவிதைகள் வழியாக கவிஞர்கள் எதிரொலிக்க வேண்டும். இயற்கையை பற்றி எழுத்தாளர்கள் சிந்திக்கவில்லை என்றால், பசுமையற்ற வனம், பறவைகளற்ற வானம், ஈரமில்லாத நிலம் இதுதான் உலகம் என்றாகிவிடும்,''

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap