Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ பிரதீபாவும்,கார்த்திகாவும் கேமராவும்!

 பிரதீபாவும்,கார்த்திகாவும் கேமராவும்!

 பிரதீபாவும்,கார்த்திகாவும் கேமராவும்!


ADDED : நவ 30, 2025 07:05 AM

Follow on Google

ADDED : நவ 30, 2025 07:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கா லத்தை உறைய செய்யும் வித்தை கேமராவுக்கு உண்டு. அதை மதி நுட்பமாய் பயன்படுத்தி, புதிய தொழில்நுட்பம் புகுத்தி என்றும் இனிக்கச்செய்யும் நினைவுகளை படைப்பதற்கு பெயர் போட்டோகிராபி. ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங், திருமணம், பிறந்த நாள், வளைகாப்பு, அவுட்டோர், ஆன்மிகம், ஸ்டீரீட் ஸ்ட்ரேஞ்சர் என சகலத்தையும் போட்டோகிராபி செய்வதே தற்போதைய டிரென்ட். புதிய தொழில்நுட்பம், போட்டிகள் பெருகிவிட்ட இந்த தொழிலில் 'அடடே' என ஆச்சரியப்பட வைக்கின்றனர் மதுரையை சேர்ந்த கார்த்திகா, பிரதீபா இரட்டை சகோதரிகள்.

சண்டே ஸ்பெஷலுக்காக இவர்களிடம் பேசியதிலிருந்து... பூர்விகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி. தொழிலுக்காக அப்பா மதுரைக்கு குடியேறியதால் இங்கேயே செட்டில் ஆகிவிட்டோம். காலேஜ் யு.ஜி., பி.ஜி., படிப்பு எல்லாம் வணிகவியல் சார்ந்தது. அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத போட்டோகிராபி துறைக்குள் வந்தது வேடிக்கையானது.

வீட்டிலும், வெளியிலும் பெண்கள் மற்றவர்களை சார்ந்திருப்பது அவர்களின் விருப்பங்களை ஒதுக்கி சுற்றியிருக்கும் பிரியமானவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப நடப்பது என நெருடலாக இருந்தது. யாரையும் சார்ந்திருக்காமல் தனித்து நின்று எங்களுக்கான விருப்பம் எதுவோ அதை செய்வதென உறுதியாக இருந்தோம். யு.ஜி., படிக்கும்போது இருவருக்குமே கேமரா மீது கொள்ளை பிரியம். கேமரா வாங்கித்தர அப்பாவிடம் கேட்பதற்கு பயம். அவர் தங்கநகை செய்யும் தொழில் செய்வதால் விளம்பரத்திற்காக நகைகளை விதவிதமாக போட்டோ எடுத்துத் தருகிறோம் எனக்கூறி கேமரா வாங்கித்தரக் கேட்டோம். அப்பாவும் வாங்கித்தந்தார். தெருக்களில் படம்பிடிக்க ஆரம்பித்தோம். கல்லுாரி ஆண்டு விழா, பொங்கல், சின்ன, சின்ன நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் கேமராவும், கையுமாக ஆஜரானோம். தோழிகளின் திருமண நிகழ்ச்சிகளில் சம்பளமில்லாத போட்டோகிராபர்களாக போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டோம்.

கலையை கற்க துாண்டுகோல் இரண்டு ஆண்டுக்கு எந்த வருமானமும் இல்லை. பின் எங்கள் மீது நம்பிக்கை வைத்து பிறந்தநாள், நிச்சயத்தார்த்தம் என சின்ன நிகழ்ச்சிக்கு நண்பர்கள் ஆர்டர் தந்தனர். எங்களின் முதல் வருமானம் 1500 ரூபாய். அதை கையில் வாங்கும்போது ஒருபக்கம் அழுகை, மறுபக்கம் சந்தோஷம்.

அதில் கிடைத்த ஊக்கம் அடுத்தடுத்து இந்த கலையை கற்பதற்கு துாண்டுகோலானது.போட்டோ, வீடியோ என ஆளுக்கொரு வேலை கற்றுக்கொண்டோம். இன்றுவரை யாரையும் பின்பற்றாமல் எங்களை மேம்படுத்த நாங்களே முயற்சி எடுக்கிறோம். கைநிறைய சம்பாதிக்கிறோம். முதன்முதலில் கேமராவை கையில் பிடித்தபோது மனசுக்குள் ரொம்பவும் பயந்தோம்.

பொருளாதாரம், தொழில் ரீதியாக எடுத்து வைத்திருக்கும் முயற்சியில் சின்ன வெற்றியையாவது வசப்படுத்த வேண்டுமென எதிர்பார்த்ததால் எல்லா விஷயங்களையும் கேமராவோடு 'கனெக்ட்' செய்தோம். படம் பார்த்தால் கூட லைட்டிங், ஆங்கிள், பிரேம் எப்படி வைத்திருக்கிறார்கள் என தொழில்நுட்ப கோணத்தில் அலசினோம்.

பெண்களாலான போட்டோகிராபி டீம் போட்டோகிராபி தொழிலுக்கு வந்து 8 ஆண்டுகளில் காஷ்மீர், கோல்கட்டா, சிக்கிம், டார்ஜிலிங், கேரளா, ஆந்திரா என பல இடங்களுக்கும் தொழில்ரீதியாக பயணித்துள்ளோம். அழுகை, ஆதரவு, சிரிப்பு, காதல் எல்லாவிதமான உணர்வுகளையும் போட்டோ எனும் நினைவுகளாக கடத்தும் 'பவர்புல் டூல்' கேமரா. அதை கையாள்வதில் எங்களுக்கு என்றுமே சலிப்பு ஏற்பட்டதில்லை. முழுவதும் பெண்களை வைத்து 'மேனேஜ்' செய்யும் போட்டோகிராபி டீமை விரைவில் உருவாக்கவேண்டும். வெளிநாடுகளிலும் கிளை திறக்க ஆசை. கனவு நிறைவேற காலமும், கடவுளும் வாய்ப்பு அமைக்கவேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap