/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவ பாலசுப்பிரமணியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
/
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவ பாலசுப்பிரமணியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவ பாலசுப்பிரமணியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவ பாலசுப்பிரமணியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
ஏப் 14, 2025

தார்சலாம், தான்சானியா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியா தரிசலாமில் புத்தர் கோயில் அமைந்திருக்கும் இடத்தில் அறங்காவலர்கள் பாலசுப்பிரமணியன், வாசு துருவ் நாராயணன், ஜெயபிரகாஷ், கணேசன் ஏற்பாட்டின் பேரில் முருகர் கோயில் கட்டி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவ பாலசுப்பிரமணியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் மற்றும் நான்காம் ஆண்டு பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண வைபோகம் மார்ச் 14, 15 மற்றும் 16 ஆம் தேதி விமர்சையாக நடைபெற்றது. 14 ஆம் தேதி சிறப்பு விசேஷ பூஜை சிவச்சாரியார் சிவஸ்ரீ சுந்தரேச சுவாமிகள், திரு குமரன் சிவாச்சாரியார், அலங்கார சிரோமணி சோமசுந்தர சிவாச்சாரியார் மற்றும் கணேசன் பிச்சுமணி ஆகியோர் விசேஷ பூஜைகளை காலை முதல் மாலை வரை செய்தனர். இரவு மகா பிரசாதத்துடன் முதலாம் நாள் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இரண்டாம் நாள் 15 ஒருங்கிணைப்பாளர் நித்யா பாலசுப்பிரமணியன் மற்றும் நடன அமைப்பாளர் ரம்யா வினில் ஏற்பாட்டின் பேரில் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி இனிதே அரங்கேறியது. மாலை சிறப்பு பூஜை மற்றும் மயில் வாகன வீதி உலா நடைபெற்றது பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் நடனமாடி வீதி உலா வந்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது இரவு மகா பிரசாதத்துடன் இரண்டாம் நிகழ்ச்சி நிறைவுற்றது.
மூன்றாம் நாள் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 9.45 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அச்சமயம் ஒரு சிலிர்ந்த குளிர்ந்த காற்று மற்றும் கும்பாபிஷேகம் முடிந்து கும்பாபிஷேக தீர்த்தம் தெளிக்கும் வேளையில் பெய்த மழை அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது எம்பெருமான் முருக பெருமானே நேரில் வந்து ஆசீர்வதித்தது போல் இருந்தது என்றால் மிகை ஆகாது.
அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் தொடங்கி 11:00 மணிக்கு ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக் கல்யாண வைபோகம் நடைபெற்றது. 12 மணி அளவில் ஆரத்தி காண்பிக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய கல்யாண விருந்து பரிமாறப்பட்டது.
கட்டுமான பணி மேற்கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா, அதற்கு உறுதுணையாக இருந்த பக்தர்கள் மற்றும் நிகழ்ச்சி இனிதே நடைபெற உறுதியா இருந்த பக்தர்கள் அனைவருக்கும் பாலசுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார்
விழா குழு உறுப்பினர்கள்: பாலசுப்பிரமணியன்.V, ஜெயபிரகாஷ் ஜெயராஜ், வாசு துருவ நாராயணன், சங்கர், தனசேகர், கிருஷ்ணன், ராமநாதன்.
https://youtu.be/E2o4ouqFGdQ
- நமது செய்தியாளர் தானேஷ் ராஜா
Advertisement