/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
ஆப்ரிக்க நாடுகளில் தமிழ்ப் புத்தாண்டு கோலாகலம்
/
ஆப்ரிக்க நாடுகளில் தமிழ்ப் புத்தாண்டு கோலாகலம்
ஏப் 22, 2025

காங்கோ நாட்டின் லூபும்பாஷி நகரில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அதை ஒருங்கிணைப்பு குழுவினரான சண்முகம், கிருஷ்ணா, சுதர்ஷன் திறம்பட நடத்தினர். இந்த தகவலை சுதர்ஷன் தெரிவித்தார்.
ஜிம்பாப்வே நாட்டில் தமிழ் புத்தாண்டு மற்றும் ஈஸ்டர் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த தகவலை வெங்கடேசன் தெரிவித்தார்.
மாலி நாட்டின் பமாக்கோ நகரில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அதை ஒருங்கிணைப்பு குழுவினரான மோகன் நாகராஜன், மோகன் ராஜ், சேகர் தங்கவேலு, கோவிந்த் திறம்பட நடத்தினர். இந்த தகவலை மோகன் நாகராஜன் தெரிவித்தார்.
காங்கோ நாட்டின் தலைநகரில் ( கின்சாசா) காங்கோ தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தில்குமரன், துணைத்தலைவர் தர்சன், துணைத்தலைவி விசாலாட்சி அருண், உறுப்பினர்கள் வெங்கட், சத்யா நாகராஜ், சந்துரு, வீரப்பன், தினேஷ், மாலதி கோபால் ஆகியோர் திறம்பட நடத்தினர்.
- தினமலர் வாசகர் அதியமான் கார்த்திக்
Advertisement