/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
வியட்நாமில் உலோக மறுசுழற்சி மாநாடு
/
வியட்நாமில் உலோக மறுசுழற்சி மாநாடு

உலகெங்குமுள்ள உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் கரியமில வாயுவைக் குறைக்க பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து இப்பூவுலகை பாதுகாக்கும் பயணத்தில், மறுசுழற்சி என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஒன்று நுகர்வதைக் குறைக்க வேண்டும், அல்லது அளவுக்கு அதிகமாக நுகர்ந்து வெளியேற்றும் கழிவுகளை நீரிலோ, நிலத்திலோ கொட்டி இப்பூமியை பாழ் படுத்தாமல் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டிற்காக கொண்டு வரவேண்டும். அவ்வாறு செய்வதில் ஒவ்வொருவரும் அக்கறை கொண்டால் மட்டுமே, நாம் நமது வருங்கால சந்ததிக்கு செய்யும் நல்லதொரு கைம்மாறாக இருக்கும்.
அவ்வாறான செயல்களை ஊக்குவிக்க, இந்தியாவில் செயல்படும் மெட்டீரியல் ரீ சைக்கிளிங் அசோசியேஷன் MRAI, வியட்நாம் தலைநகர் ஹோச்சிமின்னில் உலோகப் பொருட்களின் மறு சுழற்ச்சி சம்பந்தமான சர்வதேச வணிகச் சந்திப்பை, இந்திய ரூபாய் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான செலவில், பிரமாண்டமாக நடத்தியது.
வியட்நாமுக்கான இந்திய தூதரக அதிகாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதோடு, தமிழர்கள் உட்பட உலகெங்குமுள்ள முக்கிய நிறுவனங்களின், உயர் அதிகாரிகள் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்
- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்
Advertisement