sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

செய்திகள்

/

சிந்தனைக்கான சிறப்பு சிறுவர் சந்தை

/

சிந்தனைக்கான சிறப்பு சிறுவர் சந்தை

சிந்தனைக்கான சிறப்பு சிறுவர் சந்தை

சிந்தனைக்கான சிறப்பு சிறுவர் சந்தை


ஆக 27, 2025

Google News

ஆக 27, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பாறை: சிறுவர்களுக்கான சிந்தனைக்கான சிறப்பு சிறுவர் சந்தை சிறப்பாக நடந்தது.

இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை சாஹிபு வீதியில் 15 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் Rays of Light பாலர் பாடசாலையில் சிறுவர்களின் வண்ண மயமான சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலை வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மாணவர்களின் ஆளுமை விருத்தியில் நேர்மறையான தாக்கங்களினை செலுத்தும் முன்வருதல், கணிப்பு திறன், பங்கேற்றல், தொடர்பாடல், சந்தைப் படுத்தல், ஆக்கதிறன், தன்நம்பிக்கை, ஒன்றித்து செயற்படுதல் போன்ற பல விடயங்களில் செல்வாக்குச் செலுத்தும் வகையில் முன்பள்ளி கலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு விடயதானமாக சிறுவர் சந்தை நிகழ்வு உள்ளது.

இந்த வகையில் Rays of Light மாணவர்கள் இந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி தமது திறன்களை மேம்படுத்திக் கொண்டனர்.

பாடசாலையின் அதிபர் றீபா ஹுசைன் (Rtd. SLPS-I) தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம். பழீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, இயற்கை விவசாயி சுற்றுச்சூழல் ஆர்வலர் பொறியியலாளர் றிலா மர்சூக், பாடசாலையின் நிர்வாகப் பணிப்பாளரும் சிரேஷ்ட உளவளத்துணையாளருமான வருகை தரு விரிவுரையாளர் (திறந்த பல்கலைக்கழகம்) எம்.எம். ஹப்றாத், பாடசாலையின் ஆங்கில கலைத்திட்டத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் திருமதி எம்.எச். சைறோஸ் பானு (BA - HNDE) மற்றும் ஆசிரியர்களான செல்வி எஸ்.தமீனா, தி கே. பெளமி உட்பட பெற்றோர்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் என ப்பலரும் கலந்து கொண்டு சிறுவர் சந்தையினை வெற்றிகரமாக மாற்றினர்.

இந்நிகழ்வு தாருஸ்ஸபா முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டதும் விஷேட அம்சமாகும்.
--- நமது தினமலர் வாசகர், எம்.எஸ்.எம்.ஸாகிர்.


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us