sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆஸ்திரேலியா

/

செய்திகள்

/

மெல்போர்ன் டாக்கீஸ்: ஆஸ்திரேலிய நாடக மேடைகளில் பத்தாண்டு சாதனை

/

மெல்போர்ன் டாக்கீஸ்: ஆஸ்திரேலிய நாடக மேடைகளில் பத்தாண்டு சாதனை

மெல்போர்ன் டாக்கீஸ்: ஆஸ்திரேலிய நாடக மேடைகளில் பத்தாண்டு சாதனை

மெல்போர்ன் டாக்கீஸ்: ஆஸ்திரேலிய நாடக மேடைகளில் பத்தாண்டு சாதனை


அக் 09, 2024

Google News

அக் 09, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெல்போர்ன் வாழ் தமிழர்களால் நடத்தப்படும் மெல்போர்ன் டாக்கீஸ் நாடகக்குழு, தங்களது பத்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக 'கஜினி கஜானா காலி Double-x' எனும் முழுநீள தமிழ் மேடைநாடகத்தை அரங்கேற்றி கொண்டாடினர்.

நாடகத்தில் நடித்த நடிகர்கள் ஜெயகுமார் ராமசாமி, கோவை கணேஷ், கருப் கைலாசம், ஜெயஸ்ரீ இராமசுப்ரமணியன், முகிலரசி கலையரசன், ஸிநிவேதிதா கிருத்திகா இளங்கோ, கோபிநாத் கங்காதரன், ஸ்ரீவட்சன் சுவாமிநாதன், கமலகண்ணன் அன்பழகன், ஹரி ஹர சுதன்.


பாலாஜி விஜயகுமார், இளங்கோ, அருண் அய்யப்பன், ராதிகா பெஞ்சமின், விஜீஷா வெங்கட்ராம் நடிகர்களுக்கு நாடகப்பின்னணி உதவிகளை புரிந்து உதவினர். ஓவியா பெஞ்சமின் மற்றும் கனிஷ்க் ஜெயகுமார் நாடகத்தை காண வந்திருந்தோரை வரவேற்று நாடகத்தை தொடங்கி வைத்தனர். இந்நாடகத்தை எழுதி, இயக்கியவர் வெங்கி.


கடந்த ஆண்டு 'கலவரத்தில் ஒரு காதல்' நாடகத்தை பார்த்து ரசித்தவர்கள் அதே எதிர்பார்ப்புடன் இந்த நாடகத்தை கண்டு களித்து 'எங்களது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை' என்று கூறினர். இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை, சிறப்பான நாடகமாக்கம் மற்றும் நகைச்சுவை நிறைந்து இருந்ததாகவும், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் ரசிக்கும்படியாக இருந்ததென மகிழ்ந்தனர்.


உலகெங்கிலும் தமிழ் மேடை நாடகக்கலை நலிந்து வரும் நிலையில், இந்த நாடகத்திற்கு அரங்கம் நிறைந்த மக்களின் பேராதரவு இருந்தது மிகுந்த ஊக்கம் அளிப்பதாக மெல்போர்ன் டாக்கீஸ் நிறுவனம் நன்றி தெரிவித்தது.


இந்நாடகத்திற்கு பொருளுதவி செய்து ஆதரவு அளித்த முதன்மை ஆதரவாளர் YTM Group, Logan and Partners, மற்ற ஆதரவாளர்கள் Guru Property, Shallots Cafe, Sai Shree Foods, VJ Academy, AmrAni Fashions, Medibank, Whitehorse Accountants, Sri Murugan Trading, Na2 Entertainment and Plant Scarlet Nursery மற்றும் ஊடக ஆதரவாளர் ஆஸ்தமிழ் தொலைகாட்சி (Aus Tamil TV).


பல்வேறு இடையூறுகளுக்கிடையில் ஒரு வெளிநாட்டில் பத்து ஆண்டுகளாக வெற்றிகரமாக மெல்போர்ன் டாக்கீஸ் நாடகக்குழு நடத்தி வருகிறது. இது வரை 9 நாடகங்களை 16 முறை மேடையேற்றி உள்ளது. குறிப்பிடும்படியாக ஸ்ரீவட்சன் சுவாமிநாதன், அருண் அய்யப்பன் இருவரும் இந்த பத்து வருடங்களில் மெல்போர்ன் டாக்கீஸின் அனைத்து படைப்புகளிலும் பங்கேற்றுள்ளனர்.


'மெல்போர்ன் டாக்கீஸ்' - மெல்போர்ன் நகரில் வாழும் சில இந்திய தன்னார்வலர்கள் சேர்ந்து துவக்கிய அமைப்பு. மெல்போர்ன் டாக்கீஸை பற்றி மேலும் விவரம் அறிய, https://www.facebook.com/melbournetalkies என்ற முகநூல் தடத்திற்கு செல்லவும்.


- நமது செய்தியாளர் இளங்கோ K.R



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us