/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
ஆக்லாந்தில் ஸ்ரீ ராமநவமி வைபவம்
/
ஆக்லாந்தில் ஸ்ரீ ராமநவமி வைபவம்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீ ராம நவமி வைபவத்தை முன்னிட்டு ஆக்லாந்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் குறிப்பாக ஸ்ரீ ராம் மந்திர், பப்பாக்குரா ஸ்ரீ கணேஷ் கோவில், ஸ்ரீ ஷிர்டி சாய் மந்திர், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ராமபிரானின் அருளை பெற்றனர். அனைவருக்கும் மூன்று நேரமும் மஹாப்ரசாதம் வழங்கப்பட்டது.
மற்றும் வீடுகளிலும் வெகு விமரிசையாக ஸ்ரீ ராமர் பிறந்த தினத்தன்று சிறப்பு அபிஷேகம், பூஜை, பல நைவேத்தியங்கள் மற்றும் ஆரத்தியுடன் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராமரைப் பலவாறாக துதித்து போற்றியும் மந்திரங்கள் ஓதியும் பஜனை பாடல்கள் பாடியும் பக்தர்கள் வழிபட்டனர்.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
Advertisement