sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

இந்தோனேசியாவில் தமிழர்கள் வாழ்வும் வரலாறும்

/

இந்தோனேசியாவில் தமிழர்கள் வாழ்வும் வரலாறும்

இந்தோனேசியாவில் தமிழர்கள் வாழ்வும் வரலாறும்

இந்தோனேசியாவில் தமிழர்கள் வாழ்வும் வரலாறும்


ஜன 31, 2025

ஜன 31, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியாவிற்கு தமிழர்களின் இடமாற்றம் வரலாற்றின் பல்வேறு காலங்களில் முக்கியமான பங்கு வகித்துள்ளது. இது காலனித்துவ காலத்தின் சமூகம், அரசியல், பொருளாதாரம் எனப் பல பின்னணிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. தமிழர்களின் இடமாற்றம் மூன்று முக்கியக் கட்டங்களாகப் பார்க்கப்படுகிறது:

1. சோழர் காலம்


2. காலனித்துவ காலம்


3. காலனித்துவத்திற்குப் பிறகான இடமாற்றம்


இந்த இடமாற்றங்களின் காரணங்களையும் தாக்கங்களையும் அறிதல், தமிழர்கள் தென்கிழக்காசியாவில் நிலைநாட்டிய விதத்தையும் அவர்களின் பாரம்பரியத் துயர்களையும் வெளிப்படுத்துகிறது.


சோழர் காலம் (9-13ஆம் நூற்றாண்டு) தமிழர்களின் தென்கிழக்காசிய இணைப்பின் தொடக்கமாகும். கடல் வணிகத் தொடர்புகளுக்குப் பெயர் பெற்ற சோழர்கள், தென்கிழக்கு ஆசியா வரைப் பல்வேறு கடலோர நகரங்களில் தமிழ்க் கலாச்சாரத்தின் ஆழமானத் தொடர்புகளை ஏற்படுத்தினர். இதற்குச் சான்றாக, மலேசியாவின் கெடா கல்வெட்டுகளையும் இந்தோனேசியாவின் பிரம்பானன், போரோபுதூர் போன்ற இடங்களில் காணப்படும் கட்டிடக்கலைக் குறிப்புகளையும் கூறலாம்.


காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி, தமிழர்களின் இடமாற்றத்துக்கு மாபெரும் காரணமாக இருந்தது. தொழிலாளர் தேவைகளையும் வணிகத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக தமிழர்களை மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும், இந்தோனேசியாவிற்கும் கொண்டு சென்றனர். ஆனால், இந்தோனேசியாவில் தமிழர்களின் நிலை மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்டது. இங்கு தொழிலாளர்களின் சேர்க்கை மட்டுமல்லாது, வணிகர்களும் கல்வியாளர்களும் தங்கள் செல்வாக்கை உருவாக்கினர்.


சவால்களும் எதிர்காலப் பார்வையும்


தற்போது இந்தோனேசியாவில் தமிழ் மக்கள் பெரும்பாலும் வடக்கு சுமாத்திராப் பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்களின் வணிகப் பின்புலத்தினால் தமிழ்த் திருநாள்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளை முன்னிறுத்தி நடத்தி வருகின்றனர். இருப்பினும், தமிழ்நாட்டிலிருந்து தற்போதைய காலத்தில் வேலைநிமித்தமாக இந்தியோனேசியாவில் வந்து தங்கி இருக்கும் தமிழர்களுக்கும், அங்கே பல தலைமுறைகளாக வசித்து வரும் இந்தோனேசியத் தமிழர்களுக்கும் இடையில் ஒருவித மறைவும், சில சமயங்களில் இரு வேறு தமிழர்களாகப் பார்க்கப்படும் நிலையும் காணப்படுகிறது. இந்தத் தன்மை, தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமைக்குச் சவாலாக மாறக்கூடியது. ஆகையால், கலாச்சாரம், மொழி மேலும் பாரம்பரியத்தின் வாயிலாக, இந்த இரு தமிழ்ச் சமூகங்களுக்கும் இடையே உறவுகளை உருவாக்கி, ஒற்றுமையை வளர்க்க வேண்டிய அவசியம் இன்றையத் தலைமுறையின் பொறுப்பாகும்.


இன்றைய இந்தோனேசியாவில் தமிழ் மொழி அல்லது பாரம்பரியத்தை ஆதரிக்கக்கூடிய அதிகாரப்பூர்வ அமைப்புகள் குறைவாகவே உள்ளன. மலேசியா, சிங்கப்பூரில் தமிழ்க்கல்வி அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கும் நிலையில், இந்தோனேசியாவில் அது சவாலாக உள்ளது. இதனால், தமிழ்ப் பாரம்பரியம் சிறிது மந்தநிலையில் உள்ளதையும் காணலாம்.


தமிழர்களின் பாரம்பரியத்தைக் காப்பாற்றவும், உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு ஆதரவாக செயல்படவும் உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும்!


மருத்துவர் குருசாமி அசோகனின் பங்களிப்பு


“இந்தோனேசியாவில் தமிழர்கள் வாழ்வும் வரலாறும்” என்ற நூலின் மூலம், மருத்துவர் குருசாமி அசோகன் தமிழர்களின் வரலாற்றையும் துயரங்களையும் உலகத்திற்கு எடுத்துரைத்துள்ளார். அவரின் முயற்சிக்கு முழுமையான பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கலாம்.


இந்தோனேசியாவில் தமிழர்களின் வரலாற்று இடமாற்றம், தமிழ் வளர்ச்சி, ஆரம்பகாலச் சாதனைகள், இன்றைய சமூகத் தேவைகள், மேலும், உலகத் தமிழ்ச் சமூகத்துக்கு அவர்கள் ஆற்ற விரும்பும் பங்களிப்புகளையும் விவரிக்கிறார் மருத்துவர் குருசாமி அசோகன். அவரது நூல், வரலாற்றின் ஆழத்தையும் நுண்ணிய ஆய்வுகளின் வெளிப்பாடாகவும் விளங்குகிறது. இந்த நூல் உலகத் தமிழர்களுக்கு இந்தோனேசியத் தமிழர்கள் குறித்த அறிவையும் விழிப்புணர்வையும் அதிகரிக்கச் செய்யும் மாபெரும் பங்களிப்பாக உள்ளது. எழுத்தாளர் அசோகன் அவர்களின் எழுத்துப் பணி தொடரட்டும்!


இந்தோனேசியத் தமிழர்களுடன் கைகோர்ப்போம், அவர்களின் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் உலகத் தமிழர்களிடமும் பரப்பி, ஒற்றுமையைப் பேணுவோம்.


- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்








      Dinamalar
      Follow us