/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
SIN CITY- பாவ நகரமான- “லாஸ்வேகாஸின் சூதாட்டம்!
/
SIN CITY- பாவ நகரமான- “லாஸ்வேகாஸின் சூதாட்டம்!
ஜன 07, 2025

லாஸ் வேகஸ் கிளுகிளு நகரம் .சூதாட்ட—ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்திற்கு அங்கு பஞ்சமில்லை. அங்கு குளிர் அதிகமில்லை என்றாலும் கூட ஜில் ஜில்.
கடைகள், சாலைகள் என எங்கும் அள்ளித் தெளித்திருக்கிறார்கள் - வனப்பை! அதுவும் இரவு முழுக்க -பளபளப்பு. ஜொலிப்பு! எங்கெங்கு காணினும் சக்தியடா! பிரமாண்டம்! வாய் பிளக்க வைக்கும் ஜில்லிப்புகள்! அண்ணார்ந்து பார்க்க முடியாத உயரக்கட்டிடங்கள்!
யார் - எங்கே, எதற்காக நடக்கிறார்கள் என்று தெரியாது. இப்படியா அம்புட்டு பேரும் அரைகுறையாய் நடப்பார்கள்! பெண்கள் தங்களை ஜோடித்துக் கொண்டு காட்டிக்கொண்டு தேவதையாய் வலம் வருகிறார்கள். வழிய வந்து படம் எடுத்துக்கணுமா என்று போஸ்! அதற்கு டிப்ஸ் தரனும்.
அசத்துகிறார்கள். ஏர்போர்ட்டிலிருந்து தனியாய் டாக்ஸி பிடித்தால் - விமானத்தை விட அதிக கட்டணம்! ஷேரிங் சிக்கனம். டவுனுக்குள் சுற்ற பஸ்களும் உண்டு. அதில் 24மணி நேரத்திற்கு டோக்கன் எடுப்பது உசிதம். எங்கேயும் எப்போதும் சுற்றலாம்!
ஒவ்வொரு ஹோட்டலுமே பிரமாண்டம்! கீழே தரை தளம் முழுக்க - ஓடி விளையாடு பாப்பா! அங்கங்கே கம்ப்யூட்டர் - வீடியோ மெஷின்கள்! அனைத்திலிருந்தும் எந்திரனாய் விகற்ப ஒலிகள்! காது திகட்டும் இசை! கண்கள் மட்டும் திகட்டுவதில்லை! சொர்க்கபுரி! விளையாடுபவர்கள் எங்கே களைத்துவிடுவார்களோ என்று அவர்களுக்குக் குளிர்பானங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
என்னத்தை அடைய வேண்டி என்று தெரியாது மாந்தர்கள் அடக்கம் - உயரமாய் அமர்ந்து டோக்கன் போட்டுப்போட்டு - தோற்கிறார்கள்!
விட்டதை எவராவது எடுக்கிறார்களா என்று தெரியவில்லை. அங்கே சூதாடுவதை விட - அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது இன்னமும் அதிக சுவாரஸ்யம்! பானமே வேண்டியதில்லை!
அந்த விநியோகப் பெண்களைப் பார்த்தாலே போதை ஏறும்! அத்தனை கவர்ச்சி! முடி அலங்காரம், மேக்அப், மெல்லிசான உடையுடன் விசுக்விசுக்கென சோம சுந்தர சொக்கு பானங்கள் ஏந்தி வலம் வருகிறார்கள்.
எப்படியும் வாடிக்கையாளர்களைத் தோற்கடித்துவிட வேண்டும் என்கிற மும்முரத்தை அவர்களது உடையிலேயே பார்க்க முடிகிறது. அவர்களையும் கிளிக்! விடுவோமா என்ன!
அப்புறம் அது போதாது என்று சூதாட்ட மேஜையின் மேல் 'ஜவ்வாது மேடை கட்டி சர்க்கரையில் பந்தலிட்டு' ஆடுகிறார்கள்.
***********
சில மங்கைகளை அவர்களின் அங்க வளைவுகளில் கூசி படம் எடுக்கத் தயக்கம்! எடுக்கலாமோ... கூடாதோ! எதிர்ப்பார்களோ? சண்டை பிடிப்பார்களோ! புகார் பண்ணி போலீஸ் வந்து பிடித்துக்கொண்டு போய்விடுமோ?
இப்படியெல்லாம் உள்ளே பயம் கொண்டிருந்தாலும் - உஷார் நடவடிக்கையாய் மனைவியிடம் “நீ அந்த டேபிள் பக்கம் போய் அப்பெண்களின் பின் நில்லு. நான் உன்னை படமெடுக்கிற மாதிரி... அவர்களை...”
முறுக்கினாலும்கூட 'கணவனே கண்கண்ட தெய்வம்' என்பதால் வேண்டாவெறுப்பாக மனைவி துணைவியாய் அந்தப் பக்கம் போய் நிற்பாள். முறைப்பாள்.“சீக்கிரம் எடுங்க, எடுத்துத் தொலைங்க!”
எடுத்துத் தொலைப்பதற்குள் கேமிராவில் குறி வைத்தவர்கள் வேறு பக்கம் நகர்ந்து நழுவுவதும் உண்டு. வந்த இடத்தில் எவ்ளோ கஷ்டம் பாருங்கள்!
சில நேரம் நேராகவே கேட்டுவிடலாம் என்று துணிச்சல் வரப்பெற்று “ உங்களைப் படம் எடுக்கலாமா ?” என்று கேட்டாலும் அவர்கள் மறுப்பதில்லை.
சிலுப்பிக்கொண்டு போஸ் கொடுக்கின்றனர். என்ன ஒரு பரந்த உள்ளம்! தோல் மட்டுமில்லை. இதுங்களுக்கு மனதும்கூட வெள்ளை - என்று கிளிக்கோ கிளிக்!
எங்கும் எடுக்கலாம், எதையும் படமெடுக்கலாம் என்கிற அந்தச் சுதந்திரம்... எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
*****************
முக்கிய பின் குறிப்பு:
இத்தனையையும் முழுசாய் -பார்த்து படித்து விட்டு—
“ ச்சீய்..! ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்!” என்று சினுங்கினீர்கள் என்றால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா சொல்லிவிட்டேன்! ******************
- என்.சி.மோகன்தாஸ் with முருகன்; படமினுப்பு: வெ.தயாளன்