/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
ஸ்விட்ஸர்லாந்தில் குண்டலினி யோகா
/
ஸ்விட்ஸர்லாந்தில் குண்டலினி யோகா

மூலாதாரத்து மூண்டு எழு கனலை காலால் எழுப்பும் கலையை எளிமைப்படுத்தி - உலகப் பொது உடைமை ஆக்கி - வையத்து மாந்தரெலாம் சாந்தியும் சமாதானமும் சந்தோசமும் பெற வழி வகுத்த குண்டலினி மூல குரு - ஜெகத்மகாகுரு ஞானவள்ளல் பரஞ்ஜோதி மகான் வழிநின்று ஸ்விட்ஸர்லாந்தில் செப்டம்பர் 5 முதல் 8 ஆம் தேதி வரை திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் தத்துவ தவ உயர் ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி பரஞ்ஜோதியார் ஸ்விட்ஸர்லாந்து பெர்ன் நகரில் குண்டலினி யோகா பயிற்சி அளித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உணர்வாளர்கள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்றனர். சற்குருவால் நேரடிப் பயிற்சி பெற்றதில் மிகுந்த நற்பேறு பெற்ற உணர்வாளர்கள் “ இன்று புதிதாய்ப் பிறந்தோம் ' என மெய்சிலிர்க்க நமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement