/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
ரெடிங்க் தமிழ் சங்க சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்
/
ரெடிங்க் தமிழ் சங்க சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்
ரெடிங்க் தமிழ் சங்க சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்
ரெடிங்க் தமிழ் சங்க சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்
மே 14, 2024

ரெடிங்க் தமிழ் சங்கத்தின் (RTS, UK) 2024 சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. குத்துவிளக்கேற்றி தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. ரூபா கணேசன் அனைத்து விழா அம்சங்களையும் உள்ளடக்கிய நேர்த்தியான வரவேற்புரையை அளிக்க, அவருடன் ஸ்ரீவித்யா ஸ்ரீனிவாசன் இணைந்து இருவரும் விழா நிகழ்ச்சிகளை மிகுந்த உற்சாகத்துடனும் நேர்த்தியுடனும் தொகுத்து வழங்கினர்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் ஆடல், பாடல், பேச்சு, இசைக்கருவிகள் இசைத்தல் என்று ஒன்றுக்கொன்று சற்றும் குறைவில்லாத கலை நிகழ்ச்சிகளை அளித்து இங்கிலாந்தை சில மணிகளுக்குத் தமிழ்நாடாக மாற்றினர்.
அனைத்திற்கும் சிகரமாக அமைந்தது தடபுடலான வாழை இலை விருந்து. நளபாகம் தோற்கும் வண்ணம் சமைக்கப்பட்ட உணவைத் தாயன்போடு கேட்டுப் பரிமாறிய உள்ளங்கள் உணவுக்கு ஏழாவது சுவையொன்றைக் கூட்டினர்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் RTS அணியினர் இன்முகத்துடன் வரவேற்று விருந்தோம்பினர். வருகை தந்து விழாவைச் சிறப்பித்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் உதவி கரம் நீட்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் RTS உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
- தினமலர் வாசகர் கே.கணேசன்
Advertisement