
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாயில் வளைகுடா கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான கண்காட்சி நடந்தது.
இந்த கண்காட்சியில் இந்திய அரங்கினை துணை தூதர் சதீஷ் குமார் சிவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதன் பின்னர் அந்த அரங்கில் இடம் பெற்றுள்ள இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அந்த நிறுவனங்களில் நடத்தப்பட்டு வரும் படிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
உயர்கல்வி நிறுவன அதிகாரி அமிதாப் உபத்யாயா இந்திய துணை தூதரிடம் தங்களது நிறுவனத்தின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார்.
கல்வி தொடர்பான வழிகாட்டி கருத்தரங்கும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களும், மாணவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement