/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
லெபனான் நாட்டுக்கு இந்தியா உதவி
/
லெபனான் நாட்டுக்கு இந்தியா உதவி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெய்ரூட் : லெபனான் நாட்டின் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு சிறப்பு விமானம் மூலம் அத்தியாவசிய மருத்துவம் உள்ளிட்ட உதவிப் பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் அனுப்பி வைத்தது.
இந்த பொருட்களை இந்திய தூதர் நூர் ரஹ்மான் பெற்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் பிராஸ் அபியாத் இடம் வழங்கினார்.
அதனை பெற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் இந்திய அரசின் உதவிக்கு நன்றி தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement

