/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
லெபனானில் இந்தியாவின் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்
/
லெபனானில் இந்தியாவின் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்
லெபனானில் இந்தியாவின் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்
லெபனானில் இந்தியாவின் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்
ஆக 23, 2024

பெய்ரூட் : லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் 78வது சுதந்திர தின விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் நூர் ரஹ்மான் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனையடுத்து இந்திய குடியரசுத்தலைவரின் சுதந்திர தின உரையை வாசித்தார்.
கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சுதந்திர தினத்தையொட்டி இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் சிறப்பு புகைப்பட கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தூதரக வளாகத்தில் இந்திய தூதர் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement