/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பஹ்ரைனில் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி
/
பஹ்ரைனில் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி
பஹ்ரைனில் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி
பஹ்ரைனில் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி
ஏப் 29, 2024

மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப்தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தொழிலாளர்கள் உள்ளிட்டோர் எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் இந்திய தூதரகத்துக்கு வந்து தங்களது பிரச்சனைகள் குறித்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது பேசிய இந்திய தூதர் சிறையில் பல்வேறு காரணங்களுக்காக தண்டனை அனுபவித்து வந்த இந்திய கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி பஹ்ரைன் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமருக்கு இந்திய தூதர் நன்றி தெரிவித்தார். இந்த குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் பாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம், சம்பள வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து சிலர் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்திய தூதரக அதிகாரிகள் தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.
கடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட புகார்கள் அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. சட்ட ரீதியான பிரச்சனைகளுக்கு வழக்கறிஞர்கள் வழிகாட்டுதல்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement