
சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு பஹ்ரைனில் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வரும் நமது அன்னை தமிழ் மன்றம், இந்தியன் கிளப் உடன் இணைந்து யோகா பயிற்சிகள் அடங்கிய நிகழ்ச்சியினை இந்தியன் கிளப் உள்ளரங்கத்தில் நடத்தியது. அன்னை தமிழ் மன்றத்தின் துணைப் பொருளாளர் அருள் கணேசன் வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்வில் சாமிநாத் சேகர் தலைமையிலான தகுதிவாய்ந்த யோகா பயிற்றுனர்கள் வருகை தந்து , கலந்து கொண்ட அனைவருக்கும் யோகா, மூச்சுப் பயிற்சி மற்றும் தியான பயிற்சிகள் பயிற்றுவித்தனர். யோகா வழியாக ஆரோக்கிய வாழ்க்கையை ஊக்குவிக்கும் மன்றத்தின் முயற்சியினை அனைவரும் பெரிதும் பாராட்டினர்.
அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில் G.K யோகா ஆசிரியர்களுக்கு சிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கி கௌரவித்தார். நிகழ்வின் நன்றியுரையை அன்னை தமிழ் மன்றத்தின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி வழங்கினார். இறுதியாக யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும், அன்பளிப்பும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டன.
யோகா தின நிகழ்ச்சி வெற்றியடைய பெரிதும் உதவிய இந்தியன் கிளப் நிர்வாகத்திற்கும், கொடையாளர்களுக்கும் மன்றத்தின் நிர்வாகிகளுக்கும்,மகளிர் குழுவிற்கும், தன்னார்வலர்களுக்கும், கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னை தமிழ் மன்றம் தங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்
Advertisement