/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாய் போலீஸ் சார்பில் நடந்த ஓட்டப் போட்டி: தமிழக வீரர் சிறப்பிடம்
/
துபாய் போலீஸ் சார்பில் நடந்த ஓட்டப் போட்டி: தமிழக வீரர் சிறப்பிடம்
துபாய் போலீஸ் சார்பில் நடந்த ஓட்டப் போட்டி: தமிழக வீரர் சிறப்பிடம்
துபாய் போலீஸ் சார்பில் நடந்த ஓட்டப் போட்டி: தமிழக வீரர் சிறப்பிடம்
டிச 23, 2024

துபாய்: துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் துபாய் போலீஸ் துறையின் சார்பில் ஓட்டப்போட்டி நடந்தது. இந்த போட்டியானது 2.5 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளில் நடந்தது. இதில் 2,500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்ட தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வீர்ர் செய்யது அலி 5 கிலோ மீட்டர் தூர ஓட்த்தில் ட50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்தார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். சிறப்பிடம் பெற்ற தமிழக வீரருக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக வீரர் செய்யது அலி தொடர்ந்து பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் தனது சொந்த செலவில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நமது செய்தியாளர் காஹிலா
Advertisement