/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு நிர்வாகிகள் கலந்தாய்வு

ஜூலை 08, 2024

துபாய் : துபாய் அன்னபூர்ணா உணவகத்தில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் 07.07.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது.
சங்க தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் முஹம்மது ஜியாவுதீன் வழிகாட்டுதலின் பேரில் பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் தலைமையிலும், சங்க துணை தலைவர் திருச்சி ஜாபர் சித்திக் முன்னிலையிலும் நடைபெற்றது. தொடக்கமாக மாணவர் ஹம்தான் இறைவசனங்களை ஓதினார்.
கூட்டத்தில் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்திற்கான ஏற்பாடு, வேலை தேடி அமீரகம் வரும் புதிய மாணவர்களுக்கான உதவிகள், அடுத்ததடுத்த நிகழ்ச்சிகள் தொடர்பாக, நிர்வாக குழு உறுப்பினர்களின் ஆலோசனையுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கல்வி உதவித்தொகை திட்டத்தில், தன்னால் முடிந்த அனைத்து உதவியும் செய்வோம் என்ற உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது.
துணை பொது செயலாளர் மன்னர் மன்னன் நன்றியுரையுடன் இனிதே நிறைவடைந்தது.
இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் அபுசாலிக் அலி, மதுக்கூர் ஹிதாயத்துல்லா, திருவாவடுதுறை முஹம்மது பஜ்ருதீன், தேவிபட்டினம் ஆசிக் அஹமது, முஹம்மது நவாசுதீன், மரைக்காயர் பட்டணம் சகுபர் சாதிக், கேரளா முஹம்மது அனீஸ், முஹம்மது அலி முசஹுதீன், நிசார் அஹமது, அப்துல் மாலிக், நவுசாத் அஹமது, முஹம்மது யாசின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement
Advertisement
நான் க. ஸ்ரீ னிவாசன் ஐமால் முகமது கல்லூரி 1975 டு 1978 மாணவன். உங்கள் சங்க நற்பணி தொடர வாழ்த்துக்கள். நான் திருச்சியில் இருக்கிறேன். தங்கள் யாரேனும் ஒரு வரது மொபைல் நோ தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
Rate this