/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
சௌதி அரேபியாவில் பிரபலமாகி வரும் யோகா
/
சௌதி அரேபியாவில் பிரபலமாகி வரும் யோகா
ஏப் 28, 2024

ஜெத்தா : சௌதி அரேபியாவில் சமீப காலமாக யோகா பயிற்சிகள் பிரபலமடைந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சௌதி யோகா கமிட்டி மற்றும் சௌதி அரேபிய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து பள்ளிக்கூட மாணவ, மாணவியருக்கான யோகா சாம்பியன் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சௌதி அரேபியாவைச் சேர்ந்த மாணவ, மாணவியர் யோகா போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை விளையாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் வழங்கி கௌரவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கன்சல் ஜெனரல் சஹீத் உள்ளிட்ட பலர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement