/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலய மண்டலாபிஷேக கோலாகலம்
/
சிங்கப்பூர் ஆலய மண்டலாபிஷேக கோலாகலம்

பிரம்மாண்டமாக நடைபெற்ற சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலய மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மண்டலாபிஷேக வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் விசேஷ அலங்காரம் ஆராதனை அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக மெய்சிலிர்க்க வைக்கிறது. அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டு களை கட்டுகிறது.
சிங்கப்பூர் பிரபல கலைஞர்கள் வாய்ப்பாட்டு, நடனம் என பல்சுவை அம்சங்கள் நிறைந்த நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். புதுப்பொலிவுடன் திகழும் ஆலயத்தில் மகிழ்வுறு நிகழ்வுகள் பிரகாசிக்கின்றன. தலைமை அர்ச்சகர் சிவாகமப் பிரவீண நாகராஜ சிவாச்சாரியார் மற்றும் ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சுரேஷ் குமார் ஆகியோர் ஏற்பாடுகளைச் சிறப்புற நடைபெற ஆவன செய்துள்ளனர்.
https://www.facebook.com/share/v/1BuDqjsgQe/
https://www.facebook.com/Srisivakrishnatemple/videos/996495375763286/?mibextid=rS40aB7S9Ucbxw6v
- நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்
Advertisement