sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

உங்கள் வணிகம் தமிழ் போல வளரட்டும்

/

உங்கள் வணிகம் தமிழ் போல வளரட்டும்

உங்கள் வணிகம் தமிழ் போல வளரட்டும்

உங்கள் வணிகம் தமிழ் போல வளரட்டும்


மே 21, 2025

Google News

மே 21, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நண்பரே,

வணிகம் என்பது வளம் சேர்க்கும் பெரு வழிகளுள் ஒன்று. புதியவர்களுக்கு, ஊக்கமும் வழிநடத்த நல்லுள்ளங்களும் தேவை. கால்பதித்தவர்களுக்கு வளர ஆதரவும் தொடர்புகளும் தேவை.


தமிழ்க் கூட்டம் தமிழக்கெனக் கூடுகையில் உங்கள் நிறுவனப் பெயர் நல்ல வெளிச்சம் படும்படி நற்பெயர் வாங்குவது நிச்சயம் உதவிடும். 4000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் வருமிடத்தில் உங்கள் நிறுவனப் பெயர் பளிச்சிடுவது சட்டென பலர் மனதில் நிற்கும்.

கீழ்கண்ட ஏதேனும் ஒரு வகையில் 'பெயர் வாங்கலாம்'


+ கொடையாளர் பெட்டகம் வாங்கி நிறுவன இலச்சினையை பல பல இடங்களில் பளபளக்க வைப்பது.

+ அரங்கினுள் கடை விரித்து, கொள்வாரைக் கண்டு பேசி வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல்.


+ விளம்பரத் திட்டங்களை விலைக்கு வாங்குதல் - விழா மலர், விழா அரங்கில் மிளிரும் அறிவிப்புப் பலகைகளில் நிறுவன விளம்பரங்களை வர வைத்தல்.

+ பேரவை நிகழ்ச்சிப் பட்டியலில் உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சியை எங்கள் குழுவினருடன் சேர்ந்து செய்து உங்கள் நிறுவனத்தைப் பற்றி பேச வைத்தல்.


+ நன்கொடையாக பணமுடிப்பை பேரவையிடம் கொடுத்து, பேரவையில் நற்செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளச் செய்தல்.

என உங்கள் நிறுவனத்தின் தடத்தை விழாவுக்கு வரும் வணிகத்-தமிழர் மனதில் பதித்திட ஏராளமான வழிகள் உள்ளது.


எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு எந்தப் பாதை பொருந்துமோ அதில் பயணிப்போம். உங்கள் வணிகமும் தமிழோடு தமிழ் போல வளரட்டும். இங்ஙனம்,வாசு சண்முகம், நந்தகுமார் பாலசுப்ரமணியன், மீனாட்சிசுந்தரம் ராமநாதன், Marketing@fetna.org, விளம்பரப் பிரிவு, பேரவை 38வது மாநாட்டு விழாக்குழு

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


http://FeTNA.org
http://fetna-convention.org



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us