/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
சமூகச் செயற்பாட்டாளருடனான சந்திப்பு
/
சமூகச் செயற்பாட்டாளருடனான சந்திப்பு

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்த சமூகச் செயற்பாட்டாளர் பெ. மணியரசனுடனான சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தொலிக்க நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகம் சின்னத்தம்பி வரவேற்புரை வழங்க, இயக்குனர் குழு தலைவர் கோகுல் ராசேந்திரன் முன்னுரை வழங்கினார். துணைத்தலைவர் மருதயாழினி பிரதீப், மணியரசனை அறிமுகம் செய்து வைத்தார்.
பெ. மணியரசன் ஐயா 'அயலகத்தில் அன்னைத் தமிழ்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரின் ஆழமான சிந்தனையும், இடை இடையே கலந்த நகைச்சுவையும், பங்கேற்ற அனைவரையும் ஈர்த்தது. நிகழ்ச்சியில் அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவில் சங்க செயல்பாட்டாளர்கள் பெ. மணியரசனுக்கு பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கினர்.நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைக்க உழைத்த சங்க செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் உதவிய எல்லோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக் கொடுத்து, தொழில்நுட்ப உதவி செய்த அனைவருக்கும் நன்றி.
இந்த நிகழ்ச்சி, அட்லாண்டாவில் உள்ள தமிழ்ச் சொந்தங்களின் ஒற்றுமையையும், தமிழ்ப் பண்பாட்டின் மீதான அன்பையும் வெளிப்படுத்தும் ஓர் அழகான நினைவாக அமைந்தது என்பதை நிறைவோடு கூறிக்கொள்கிறோம்.
Advertisement