/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
ஆடிக்கூழ் ஊற்றி அமெரிக்க அம்மனுக்கு வழிபாடு; மக்கள் பக்தி பரவசம்
/
ஆடிக்கூழ் ஊற்றி அமெரிக்க அம்மனுக்கு வழிபாடு; மக்கள் பக்தி பரவசம்
ஆடிக்கூழ் ஊற்றி அமெரிக்க அம்மனுக்கு வழிபாடு; மக்கள் பக்தி பரவசம்
ஆடிக்கூழ் ஊற்றி அமெரிக்க அம்மனுக்கு வழிபாடு; மக்கள் பக்தி பரவசம்
ஆக 18, 2025

அமெரிக்காவின் குயின்லான் நகரத்தில் அமையவிருக்கும் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலின் 2வது ஆண்டு ஆடிக்கூழ் திருவிழா ஆகஸ்ட் 3, 2025 அன்று கொண்டாடப்பட்டது. இது மட்டும் அல்லாமல், அமெரிக்காவில் முதல் மாரியம்மன் கோவிலாகவும், குலதெய்வம் மற்றும் காவல் தெய்வ வழிபாட்டுடன் கூடிய திருக்கோவிலாகவும் அமையப்படவுள்ளது.
ரொம்ப நல்லா அமைஞ்சிருக்கு
இதனையொட்டி சமயபுரத்தாளை வேண்டிக்கொண்டு மறுநாளுக்கான கூழை தயார் செய்ய ஆரம்பித்தனர். கூழ் காய்ச்சி முடித்தவுடன் அனைவரும் கிளம்பி விழா நடக்கவிருந்த இடத்திற்கு சென்று முன்னேற்பாடுகளை செய்து முடித்தனர்.
ஓம்சக்தி! பராசக்தி! என்ற நாமத்துடன், பறை முழங்க தீபாராதனை காட்டி 2ஆம் ஆண்டு ஆடிக்கூழ் திருவிழா மிக அருமையாகத் துவங்கியது. இடியுடன் பொழிந்த மழை, சமயபுரத்தாள் நேரில் வந்து “எனது ஆசிர்வாதம் என்றும் உமக்குண்டு, என்னை குளிர்விக்க வந்த உங்களை நான் குளிர்விக்கிறேன்”, என்பது போல இருந்ததை அனைவரும் உணர்ந்தோம்.
“அம்மனுக்கு கட்டியிருக்கும் சேலை ரொம்ப நல்லா அமைஞ்சிருக்கு”, ன்னு ஒருவர் சொல்ல, “இந்தியாவிலிருந்து ஆத்தாளுக்கு நான் புடவை கொடுத்தனுப்பறேன்னு நளினி அம்மா கிட்ட இருந்து போன் வந்துச்சு. அத தான் இன்னிக்கி ஆத்தா கட்டி இருக்கா”, ன்னு ரொம்ப சந்தோஷமா கோவில் கமிட்டி உறுப்பினர் கூறினார்.
டல்லஸ் சமயபுரம் மரியம்மன் கோவிலுக்காக முதல் பாடலாக சென்னையிலிருந்து பாடகர் வேல்முருகன் பிரத்தியேகமாக எழுதி,இசை அமைத்து ,பாடிய மாரியம்மன் பாடல் கொண்ட குறுந்தகடை ரமணன் அய்யா வெளியிட்டு சிறப்பித்தார்.
சமய சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ தமிழ் கடவுள் முருகப்பெருமான்,முழு முதற் கடவுள் பிள்ளையார், சமயபுரத்தாள் மற்றும் காவல் தெய்வங்கள் பற்றியும் எடுத்துறைக்க சிறப்பு விருந்தினராய் வந்திருந்தார்.செவிக்கு இனிமையாய் அவர் ஆற்றிய உரை அருமையாக இருந்தது.
அடுத்ததாக சிறப்பு விருந்தினர் இசைக்கவி ரமணன் அய்யா “அன்பின் மறுபெயர் அம்மா…” என்று அம்மனின் சிறப்பை பாடி அவரது உரையை துவங்கினார். ,”சமயபுரத்தை இங்கே கண்டது போல இருக்கிறது”, என்று மகிழ்ந்து கூறினார்.
நன்கொடை வழங்கிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.
pay.sillarai.com/cp/fs4C4dyZt5U8TpqDGgXCsf
மேலும் சில கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அம்மன் முளைப்பாரி சுற்றி பெண்கள் கும்மி அடிக்க, செண்டை மேளம் ஒரு புறம் முழங்க, மறுபுறம் மேடையில் குழந்தைகள் சிலம்பாட்டம் என ஒரே நேரத்தில் மூன்றும் களைகட்டியது. செண்டை மேளத்தின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு பெண்மணி தன்னை மறந்து ஆடிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு அருள் வந்தது. சமயபுரத்தாளுக்கு திருப்தி என்று அனைவரும் அறிந்து மிகவும் நெகிழ்ச்சி அடைந்ததுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
அம்மனின் அருளும், பக்தர்களின் பாசமும் ஒன்றாக கலந்து, அந்த இடத்தில் ஒரு தெய்வீகமான அனுபவமாக உருவெடுத்தது.அதைப் பார்த்து நின்ற நமது இதயத்தில் ஓர் உணர்வு எழுந்தது: 'அறம் விழையும் இடத்தில் இறை அருள் குடிகொண்டிருக்கும்.' (நல்ல பணிகள் நடக்கும் இடத்தில் இறைவனின் அருளும் உறைந்து கிடக்கும்). பாலாலயம் விரைவில் தோன்ற சமயபுரத்தாளை வேண்டி விட்டு நாமும் நிறைவுடன் அங்கிருந்து கிளம்பினோம்!
அன்புடன்,கோவில் நிர்வாகக் குழு.
- நமது செய்தியாளர், ஷீலா ரமணன்.
Advertisement