
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புறாவுடன் நட்பு பாராட்டியது ஒரு அன்னப்பறவை. ஆனால் அன்னத்தின் அழகைக் கண்டு பொறாமை கொண்டது புறா. 'அனைவரிடமும் அன்பு காட்டு. பிறருக்கு உதவு' என அறிவுரை சொன்னது அன்னம். ஆனால் புறாவோ அதை பொருட்படுத்தவில்லை.
ஒருநாள் அன்னம் தங்கியிருந்த மரத்தடியில் வேடன் ஒருவன் துாங்கிக் கொண்டிருந்தான். அன்னம் தன் இறக்கையால் விசிறி போல அவனுக்கு வீசியது. அதைப் பார்த்த புறா படுத்திருந்த வேடன் மீது எச்சமிட்டு பறந்தது. கோபத்தில் எழுந்த அவன் அன்னத்தின் மீது அம்பு தொடுத்தான். அழகைக் கண்டு பொறாமைப்பட்ட புறாவும், நன்றி மறந்த வேடனும் கூடாநட்புக்கு எடுத்துக்காட்டு.