நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மருத்துவமனையில் இருந்த தாத்தாவை பார்க்க பலர் பழங்களுடன் வந்தனர். பழங்கள் வீணாக கூடாது என்பதால் அண்டை வீட்டாருக்கு பங்கிட்டுக் கொடுத்தாள் தாய். ஆரஞ்சு பழத்தை பிழிந்து ஜூஸாக கொடுத்த பாட்டியிடம், ''தொடர்ந்து பிழிந்தால் இதில் எனக்கு பிடித்த ஆப்பிள் ஜூஸ் வருமா'' எனக் கேட்டு அழுதாள் சிறுமி. அதற்கு பாட்டி,'ஆரஞ்சு பழத்தில் இருந்து ஆரஞ்சு ஜூஸ்தான் கிடைக்கும். ஒருநாளும் ஆப்பிள் வரவே வராது?'' எனக் கத்தினாள்.
இந்த சம்பவத்தை ஒரு நிமிடம் சிந்தியுங்கள். இந்த சிறுமியைப் போல மனிதர்களில் பலர் கிடைக்காத ஒன்றுக்காக ஏங்குகிறார்கள். இருப்பதை ரசிக்கப் பழகினால் எப்போதும் இன்பம்தான்.