
பணக்காரர் ஒருவரின் வீட்டிற்குள் திருட நுழைந்தான் படித்த இளைஞன் ஒருவன். அப்போது அவர் தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார். 'நம் பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைத்த பாடில்லை. நகரிலுள்ள சத்திரத்தில் வெளியூர் இளைஞர்கள் வேலை தேட தங்கியுள்ளனர். அவர்களில் நல்லவர் ஒருவரை தேர்ந்தெடுத்தால் என்ன'' என்றார் மனைவியிடம்.
அவளும் சம்மதித்தாள். இதைக் கேட்ட இளைஞனும் மறுநாளே வேலை தேடும் இளைஞர்களில் ஒருவனாக சத்திரத்தில் தங்கினான். அங்கு வந்த பணக்காரர், அங்கிருந்த இளைஞர்களிடம் பேச்சு கொடுத்தார். அனைவரும் பணத்தாசை பிடித்தவர்களாக இருப்பதை உணர்ந்தார். திருட வந்த இளைஞரிடம் பேச்சு கொடுத்த போது, அவர் பணத்தை விட பண்புக்கு முதலிடம் கொடுப்பது தெரிந்தது. அவருக்கு தன் நிர்வாகத்தில் வேலைவாய்ப்பு கொடுப்பதோடு, தன் மகளுக்கு ஏற்ற கணவராகவும் இருப்பார் என முடிவு செய்தார்.
நல்லவன் போல நடி; நீயும் நல்லவனாகி விடுவாய்.