நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கால்நடைகளை வளர்ப்பவர் டேனியல். அன்று பணியாளர்கள் வராததால் தீவனம் வைப்பது, பால் கறப்பது என பணிகளை செய்தார். அந்த நேரத்தில் அவரின் கைக்கடிகாரம் காணாமல் போனது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அங்கே விளையாடிய சிறுவர்களிடம் கடிகாரத்தை கண்டுபிடித்து தந்தால் பரிசு தருவதாகச் சொன்னார். ஆனாலும் பலனில்லை. அப்போது ஒரு சிறுவன், ''மாடுகளுடன் அனைவரையும் கொட்டிலை விட்டு வெளியேற்றுங்கள். நான் கண்டுபிடிக்கிறேன்'' என்றான். சற்று நேரத்தில் எடுத்தும் கொடுத்தான். 'கடிகாரத்தின் 'டிக்... டிக்..' ஓசை அப்போது கேட்கவில்லை. அதனால் எல்லோரையும் வெளியேறச் சொன்னேன்' என்றான் சிறுவன். அவனுக்கு பரிசு ஒன்றைக் கொடுத்தார்.