
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கிலாந்தில் குருமார்களைத் தவிர மற்றவர்கள் பைபிள் வைத்திருக்க கூடாது என்ற சட்டம் இருந்தது. வில்லியம் திண்டேல் என்பவர், 'அனைவருக்கும் பைபிள் கிடைக்க வழிசெய்வேன்' என உறுதியேற்றார். அதற்காக ஜெர்மனிக்குச் சென்று பைபிளை அச்சிட்டு மக்களுக்கு வழங்கினார்.
இதையறிந்த குருமார்கள் அவற்றை தீயிட்டனர். மீண்டும் மீண்டும் அச்சிட்டுக் கொடுக்க விடாமல் தீயிட்டனர். அப்போது 'குருமார்களுக்கு ஆதரவளிக்கும் இங்கிலாந்து மன்னரின் கண்களை திறப்பீராக' என பிரார்த்தித்தார். அவரின் எண்ணம் பலித்ததோடு மக்களுக்கும் பைபிள் வழங்கப்பட்டது.