ரோமப் பேரரசன் ஒருவன் தன்னை ஆண்டவர் என்றும், தினமும் என்னை ஆராதிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டான். அவர்களில் 100 பேர் ஏற்க மறுத்ததால் சவுக்கடி கொடுத்தான். அவர்களுக்கு புத்தி சொல்ல ஒரு மந்திரியை நியமித்தான். அவரும் சுடுமணலில் நிற்க வைத்தும், பனிக்கட்டிகளில் படுக்க வைத்தும், குழிக்குள் தள்ளி தலை மட்டும் தெரியும்படி புதைத்தும் தண்டனைகளை வழங்கினார். கொடுமைக்கு ஆளானாலும் ஒருவனை தவிர 99 பேர் கீழ்படியவில்லை.
அப்போது வானத்தில் இருந்து கிரீடம் ஏந்தியபடி நுாறு தேவதைகள் மண்ணில் இறங்கினர். அவர்களில் ஒரு தேவதை மட்டும் முகத்தை சுளித்தபடி காட்சியளித்தது. அதைக் கண்ட மந்திரிக்கு உண்மை புரிந்தது. உடனே மன்னரின் கொள்கையை எதிர்த்து அவர்களை தண்டனையில் இருந்து விடுவித்தார். மகிழ்ந்த தேவதைகளும் மந்திரி உள்ளிட்ட 100 பேருக்கும் கிரீடம் அளித்து வானுலகிற்கு புறப்பட்டன. உண்மையுடன் இருந்தால் உனக்கான கீரிடம் அளிக்கப்படும்.