
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐந்து நண்பர்கள் காட்டு வழியே சென்ற போது ஜாடி ஒன்றில் தண்ணீர் இருப்பதைக் கண்டனர். அதை திறந்த போது தேவதை ஒன்று தோன்றியது. 'கேளுங்கள் தருகிறேன்' என சொன்னது. ஒருவன் பணக்காரன் ஆகவும், மற்றொருவன் அரசியலில் ஜொலிக்கவும், மூன்றாமவன் நடிகர் ஆகவும், நான்காவது நபரோ அழகன் ஆக வேண்டும் என்றும் கேட்டனர். அப்படியே ஆகட்டும் என ஆசியளிக்கவே மகிழ்ந்தனர்.
ஐந்தாவது நபர் யோசித்தபடியே, ''நீங்கள் என்ன வரம் அளித்தாலும் நான் சந்தோஷப்படுவேன்'' என்றான். அவனிடம், ''நீ மட்டும் காத்திரு. வருகிறேன்'' என சொல்லி தேவதை மறைந்தது. மற்றவர்களுக்கோ அங்கிருந்து செல்ல மனமில்லை.
'அவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது என பார்க்க காத்திருந்தனர். ஆனால் நேரமோ சென்று கொண்டிருக்க நிம்மதியை இழந்தனர். ஐந்தாவது நபரோ அமைதியாக இருந்தான். மனதிலுள்ள நிம்மதி கண்களில் தெரிந்தது.