நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமையல் அறையில் இருந்து... ராகேஷ் ராகேஷ் என குரல் கேட்டது. வெளியில் போறியா! அதற்கு ராகேஷ் என்னம்மா எனக்கேட்டான். கீரையும்,மாங்காயும் வாங்கி வா எனச் சொன்னாள். அதற்கு அவன், அண்ணனிடம் சொல்லக் கூடாதா, நானே தான் எப்போதும் வாங்கணுமா என கோபித்தான். இரண்டுநாள் கழித்து அவனுக்கு வேலையில் சேருவதற்கான கடிதம் வந்தது.
அங்கு அவனிடம், தினமும் தொழிற்சாலையில் உள்ள உணவகத்திற்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்களை வாங்கி கொடுப்பது,
அதன் கணக்குளை பார்ப்பது உன் வேலை என்றார் மேலாளர். அதைக்கேட்டதும் ராகேஷ் 'அம்மா சொல்வதை கேட்கவில்லையே' என வருந்தினான்.
'பெற்றோரை கனம் பண்ணுவீராக' என்கிறது பைபிள்.