
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடை காலத்தில் கிணறு ஒன்றில் வாழ்ந்த மீன்கள் தண்ணீர் இன்றி கஷ்டப்பட்டன. இதை கவனித்த இளைஞன் ஒருவன், வாளி நிறைய நீருடன் கிணற்றுக்குள் இறங்கி மீன்களை பிடித்து வந்தான்.
புத்துணர்வு பெற்ற அவை துள்ளிக் குதிக்க, அதைக் கண்ட இளைஞன் மகிழ்ந்தான். நீர்த்தொட்டியில் அவற்றை வளர்த்தான். சில நாட்களில் கோடை மழை பெய்யவே மீண்டும் கிணற்றில் நீர் ஊறியது. மீன்களை கிணற்றுக்குள் விட்டான்.பிரச்னையின் போது மனிதர்களும் இந்த மீன்களைப் போல துடிக்கிறார்கள். இளைஞன் அவற்றுக்கு உதவியது போல ஆண்டவரின் அருளால் துன்பம் தீரும்.