நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போரின் போது ஓய்வெடுக்க மரத்தடியில் ஒதுங்கினார் தாவீது. எதிரி ஒருவன் அவரின் முகத்திற்கு நேராக வாளை காட்டி 'உம்மை காப்பாற்றுபவர் யார்' எனக் கேட்டான். 'ஆண்டவர்' என பதிலளித்தார். அதைக் கேட்ட அவன் வாளைக் கீழே போட்டான். உடனே அதை எடுத்த தாவீது அவன் செய்ததைப் போல வாளைக் காட்டி, ''உன்னைக் காப்பாற்றுபவர் யார்'' எனக் கேட்டார். அதற்கு ''நீங்கள் நினைத்தால் என்னை காப்பாற்றலாம்'' என்றான் அவன். ''நம் இருவரையும் காப்பற்றுபவர் அவரே'' எனக் கூறினார்.