நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
8. இந்த எண்ணைப் பற்றி பலரும் கெட்டதாகச் சொல்ல அதன் மீது வெறுப்பு கொண்டான் சிறுவன் ராபர்ட். எட்டாம் தேதியன்று எந்த முயற்சியிலும் ஈடுபட மாட்டான்.
இளைஞனான பின் பைக் ஓட்ட ஆசைப்பட்டான். டுவீலர் லைசென்ஸ் பெற விண்ணப்பித்தான். அப்போது போக்குவரத்து ஆய்வாளர் எட்டு போடச் சொன்னார். பைக் மீதுள்ள காதலால் எட்டு மீதான வெறுப்பு
காணாமல் போனது. எந்த எண்ணும் ராசிதான் என உணர்ந்தான் ராபர்ட்.