
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரச்னை இல்லாத மனிதர்கள் யாருமில்லை. இந்த பிரச்னை உண்டாக காரணம் எது என்பதை அறிய வாடிகனைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் ஆராய்ச்சி செய்தார். அதற்காக சிறியவர், பெரியவர், ஆண், பெண் என பல தரப்பிலும் புள்ளி விபரங்களை சேகரித்தார்.
ஓராண்டு தேடலுக்குப் பின் முடிவை வெளியிட்டார். அதில் தேவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அளவுக்கு அதிகமான தகவல்களை மனிதர்கள் கேட்டுப் பெறுகிறார்கள். அதுவே பிரச்னைக்கு முக்கிய காரணி என்றார்.
தேவையில்லாத விஷயங்களை உள்வாங்குவதால் மனம் குழப்பத்திற்கு ஆளாகும். தேவையான போது மட்டும் பேசவோ, கேட்கவோ செய்யுங்கள். மற்ற நேரத்தில் அமைதியாக இருங்கள். வாழ்வில் பிரச்னை குறுக்கிடாது.