sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஏப் 27, 2023 03:07 PM

Google News

ADDED : ஏப் 27, 2023 03:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வி.ராஜராஜன், நத்தம், திண்டுக்கல்.

*கடனாக கொடுத்த பணம் கிடைக்க யாரை வழிபடலாம்?

திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து கொள்ளுங்கள். பணம் திரும்ப கிடைக்கும்.

எஸ்.சுப்பிரமணியன், குரோம்பேட்டை, சென்னை.

*தரையில் அமர்ந்து சாப்பிடுதல், டேபிளில் அமர்ந்து சாப்பிடுதல் எது சரியானது?

தரையில் அமர்ந்து சாப்பிடுவது சரியானது. இது உடற்பயிற்சியாகவும் அமையும்.

எல்.சசிதேவி, ராமநாதபுரம், கோயம்புத்துார்.

*விரலி மஞ்சள், மஞ்சள் கிழங்கு இதில் எதை சுமங்கலிக்கு கொடுக்கலாம்?

இரண்டுமே மங்களம் தரும் பொருள். ஆனாலும் நீராடும் போது பூசும் மஞ்சள் கிழங்கே சிறந்தது.

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி.

*தினந்தோறும் கோயில்களில் யாகம் நடக்குமா...

பெரிய கோயில்களில் மட்டும் யாகம் நடக்கும். இதற்கு 'நித்ய ஹோமம்' என்று பெயர். பக்தர்கள் உபயமாக நடத்துவதை 'காமிய ஹோமம்' என்பர்.

பி.ரவி, பெங்களூரு.

* வீட்டில் பரணில் உள்ள வீணையை பூஜையில் வைக்கலாமா?

நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ' என வருந்துகிறார் மகாகவி பாரதியார். பூஜையில் வைப்பது நல்லது. வீணை கற்கும் மாணவருக்கு தானமாக அளிப்பது சிறப்பு.

எம்.கவிதா, புளியங்குடி, தென்காசி.

*பூஜையறையில் மேற்கு நோக்கி சுவாமி படங்கள் இருக்கலாமா?

கிழக்கு நோக்கி வையுங்கள். முடியாவிட்டால் மேற்கு நோக்கி வைக்கலாம்.

கே..லலிதா, பப்பன்கிளேவ், டில்லி.

*என் கணவர் குடியில் இருந்து மீள என்ன செய்யலாம்?

கடலுார் மாவட்டம் பண்ருட்டி 'திருவதிகை வீரட்டானேஸ்வரர்' (சிவன்) கோயிலில் வழிபடுங்கள்.

ஜி.கனிஷ்கா, விருதுநகர்.

*திருஷ்டியைப் போக்கும் சக்தி, கல் உப்பிற்கு உண்டா?

உண்டு. மிளகாய் வத்தல், கல் உப்பு, முச்சந்தியில் எடுத்த மண் மூன்றையும் சேர்த்து, தலையைச் சுற்றி விட்டு நெருப்பில் இடுங்கள்.

ஆர்.உமா, மந்தைவெளி, சென்னை.

*கோபுரங்களில் பஞ்சவர்ணம் தீட்டுவது ஏன்?

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களின் சேர்க்கையே உலகம். அவற்றை காப்பது நம் கடமை என்பதால் கோபுரங்களில் பஞ்சவர்ணம் தீட்டப்படுகிறது.

கி.அருணாசலம், மணக்குளம், புதுச்சேரி.

*குளிகை நேரத்தில் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது?

குளிகை நேரத்தில் நல்ல செயல்களை செய்யலாம். இறுதிச்சடங்குகளை செய்யக் கூடாது.






      Dinamalar
      Follow us