ஏப். 14 சித்திரை 1: விசு புண்ணியகாலம். திருவோணவிரதம் தமிழ்ப்புத்தாண்டு. திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் பாலாபிஷேகம். பாபநாசம் சிவபெருமான் திருமணக்கோலத்துடன் அகத்தியருக்கு காட்சி. மதுரை மீனாட்சியம்பாளுக்கு வைரக்கீரிடம் சாற்றியருளல். கரிவலம் வந்த நல்லுார் பால்வண்ணநாதர் கோயிலில் தீர்த்தவாரி மற்றும் சப்தாவர்ணம்.
ஏப். 15 சித்திரை 2: ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி சன்னதியில் நான்கு கருட சேவை. திருநள்ளார், குச்சனுார், இலத்துார் கோயில்களில் சனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு. கருடதரிசனம் நன்று.
ஏப். 16 சித்திரை 3: முகூர்த்த நாள். ஏகாதசி. திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீவில்லிபுத்துார் ரெங்கமன்னார் ஆண்டாள் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருமோகூர் காளமேகப்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. இன்று தென்னை,மா, புளி, வைக்க நன்று.
ஏப். 17 சித்திரை 4: பிரதோஷம். சகல சிவபெருமான்கோயில்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு. அஹோபில மடம் ஸ்ரீமத் 32 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். சங்கரன் கோவில் கோமதியம்பாள் புஷ்ப பாவாடை தரிசனம்.
ஏப். 18 சித்திரை 5: சமயபுரம் மாரியம்மன், ஊட்டி மாரியம்மன் தேர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபத்தில் எழுந்தருளல்.
ஏப். 19 சித்திரை 6: அமாவாசை. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தேர். திருக்கண்ணபுரம் சவுரி ராஜபெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை. தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
ஏப். 20 சித்திரை 7: செம்பொன்னார் கோயில் சுவர்ணபுரீஸ்வரர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் வைரவேல் தரிசனம்.

