sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஏப் 09, 2023 01:37 PM

Google News

ADDED : ஏப் 09, 2023 01:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சி.சிவானந்தம், சமயநல்லுார், மதுரை.

*வீட்டிலேயே வேல்பூஜை செய்யலாமா?

செய்யலாம். தினமும் பால் அபிஷேகம் செய்து பூக்களால் வேலுக்கு அர்ச்சனை செய்து திருப்புகழ், கந்தரனுபூதி பாராயணம் செய்தால் கந்தக்கடவுள் உங்கள் சொந்தக் கடவுளாகி விடுவார்.

எம்.விக்னேஷ், வெண்கரும்பூர். கடலுார்.

*குரு பார்த்தால் கோடி நன்மையாமே...

நவக்கிரகங்களில் பூரண சுபர் குரு மட்டுமே. இவர் இருக்கும் ராசியில் இருந்து முறையே 5,7,9 ம் ராசிகளை பார்ப்பார். இந்த ராசிகள் சுபபலம் பெறுவதால் அங்குள்ள கிரகங்களின் தோஷம் விலகும். இதையே 'குரு பார்க்க கோடி நன்மை' என்கிறார்கள்.

பி.ரவி, குலசேகரம், கன்னியாகுமரி.

*சமையலறை அருகில் படுக்கையறை இருக்கலாமா?

வீட்டின் தென்கிழக்கு மூலையில் சமையலறை இருக்க வேண்டும். சற்று இடைவெளி விட்டு தென்மேற்கு அல்லது வடமேற்கில் படுக்கையறை அமைக்கலாம்.

ஆ.மணி, பொள்ளாச்சி, கோயம்புத்துார்.

*கோயில்களில் மூலவர் தவிர இன்னும் சில சிவலிங்கம் இருப்பது ஏன்?

அக்காலத்தில் மன்னர்கள், தர்மகர்த்தாக்கள், ஊர் பெரியவர்கள் தாங்கள் தரிசித்த தலங்களின் நினைவாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வது வழக்கம். அவை பல பெயர்களில் கோயில்களில் இருப்பதைக் காணலாம்.

எல்.கந்தரூபி, பெரிய பாளையம், திருவள்ளூர்.

*தெப்பக்குளத்தில் மீன்களுக்கு பொரியிடுவது ஏன்?

தெப்பக்குளத்தில் பொரியிட்டால் முன்வினை பாவம் தீரும். மீன்களுக்கு தீங்கு நேராமல் பாதுகாப்பது புண்ணியம்.

கே.கமலா, மாடல்டவுன், டில்லி.

*யாகம், வேள்வி இரண்டும் ஒன்று தானே?

யஜனம் என்பதில் இருந்து வந்தது யாகம். வேட்டுதல் என்பதில் இருந்து வந்தது வேள்வி. இரண்டும் ஒன்றே.

மா.அன்பு, மாடிவாளா, பெங்களூரு.

*தேவைக்குப் பணம் கிடைக்கவில்லை. என்ன செய்யலாம்?

தேவைக்கு ஏற்ப முயற்சி, உழைப்பை அதிகப்படுத்துங்கள்.

வே.மாரியப்பன், கழுகுமலை. துாத்துக்குடி.

*தீட்சை பெற்ற நான் அனுஷ்டானத்தை கைவிட்டேன். மீண்டும் தீட்சை பெறலாமா?

அவசியம் இல்லை. தீட்சையளித்த குருநாதரிடம் தெரிவித்தால் அதற்கான பரிகாரத்தை செய்வார்.

பி.கஸ்துாரி, சிங்கப்பெருமாள்கோயில், செங்கல்பட்டு.

*விஞ்ஞானம், மெய்ஞானம் வேறுபாடு என்ன?

கல்வியால் கிடைக்கும் அறிவு விஞ்ஞானம். இது அவசியம். கடவுள் அருளால் கிடைக்கும் அறிவு மெய்ஞானம். இது ஆன்மாவுக்கு அவசியம்.

எம்.ராதா, குன்றக்குடி, சிவகங்கை.

*பித்தளை, வெள்ளி விளக்கு என்ன வேறுபாடு?

தெய்வீக சக்தியை ஈர்ப்பதில் வேறுபாடு உண்டு. பித்தளையை விட வெள்ளிக்கு ஈர்க்கும் சக்தி அதிகம்.






      Dinamalar
      Follow us