
மகாவிஷ்ணுவின் ஆயிரம் பெயர்களை சொல்ல முடியாதவர்கள் அவருடைய இருபத்து நான்கு பெயர்களையாவது தினமும் சொல்லலாம் என்கிறது விஷ்ணுபுராணம். அப்பெயர்களும் அதற்குரிய பொருளும் தெரிந்தால் சிறப்பு தானே...
* கேசவன் - நீண்ட முடியை உடையவர்
* நாராயணன் - உலகத்தை இருப்பிடமாக கொண்டவர்
* மாதவன் - ஞானத்தலைவர்
* கோவிந்தன் - நிலத்தை மீட்டவர்
* விஷ்ணு - எங்கும் நிறைந்தவர்
* மதுசூதனன் - மது என்னும் அரக்கனை அழித்தவர்
* திரிவிக்ரமன் - மூவுலகை வென்றவர்
* வாமனன் - புகழுக்குரியவர்
* ஸ்ரீதரன் - அதிர்ஷ்டம் உள்ளவர், திருவையுடையவர்
* ரிஷிகேசன் - புலன்களை ஆள்பவர்
* பத்மநாபன் - வயிற்றில் தாமரை கொண்டவர்
* தாமோதரன் - தன்னடக்கமானவர்
* சங்கர்ஷணன் - ஒடுக்கி கொள்பவர்
* வாசுதேவன் - உள்ளுறைபவர்
* அநிருத்தன் - எதிரியில்லாதவர்
* புருஷோத்தமன் - மனிதரில் சிறந்தோர்
* அதோக்கஷஜன் - அண்டங்களை இடமாக கொண்டவர்
* நரசிம்மன் - சிம்மமுக மனித உடல் உடையவர்
* அச்சுதன் - வீழ்ச்சி இல்லாதவர்
* ஜனார்த்தனன் - பரிசளிப்பவர்
* உபேந்திரன் - இந்திரன் தம்பி
* ஹரி - துன்பம் துடைப்பவர்
* கிருஷ்ணன் - கரியவர்

