sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

தமிழகத்தில் ராமாயணம்

/

தமிழகத்தில் ராமாயணம்

தமிழகத்தில் ராமாயணம்

தமிழகத்தில் ராமாயணம்


ADDED : ஏப் 06, 2023 08:51 AM

Google News

ADDED : ஏப் 06, 2023 08:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆழ்வார்களால் பாடப்பெற்ற தலங்களை 108 திவ்யதேசம் என்பர். கீழ்கண்ட அந்த தலங்கள் ராமாயணத்தோடு தொடர்புடையவை.

* ராமர் அவதரித்த சூரிய குல மன்னர்கள் வழிபாடு செய்த தலம் திருச்சி ஸ்ரீரங்கம்.

* செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை ராமரை, வால்மீகி வழிபாடு செய்துள்ளார்.

* ஜடாயுக்கு அருள் புரிந்த தலம் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி.

* ஜடாயுக்கு முக்தி கொடுத்த பின்னர் ராமர் ஓய்வு எடுத்த இடம் தஞ்சாவூர் மாவட்டம் திருப்புள்ளம் பூதங்குடி.

* கடலின் குறுக்கே பாலம் கட்ட ராமர் தர்ப்பை புல்லின் மீது தவம் செய்த இடம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி.

* ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணபுர ராமரை போற்றியுள்ளார்.

* தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் வட்டத்தில் உள்ள திருவெள்ளியங்குடியில் ராமரே மூலஸ்தான மூர்த்தி.

* தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்கவிஸ்தலம் ராமர், அனுமனால் வழிபாடு செய்யப்பட்டவர்.

* மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள திருவழுந்துார் பெருமாளை தரிசித்த பின்னரே ராமாயணம் இயற்ற ஆரம்பித்தார் கம்பர்.

* ராமர் தானம் கொடுத்த பொன்னை கொண்டு ஒரு அந்தணர் கட்டிய திருச்செம்பொன் கோயில் தான் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது.

* திருவள்ளூர் வீரராகவர் கிடந்த கோலத்தில் அருள் செய்கிறார்.

* திருவல்லிக்கேணியில் ராமருக்கு சிறப்பான சன்னதிகள் உள்ளன.






      Dinamalar
      Follow us