sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஒளிமயமான எதிர்காலம் உண்டு

/

ஒளிமயமான எதிர்காலம் உண்டு

ஒளிமயமான எதிர்காலம் உண்டு

ஒளிமயமான எதிர்காலம் உண்டு


ADDED : ஆக 21, 2023 03:11 PM

Google News

ADDED : ஆக 21, 2023 03:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சூரியன் உதயமாவதற்கு முன் எழுந்தால், உனக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு.

* விநாயகரை வணங்கு. நல்ல மனமும் லட்சுமியின் கடாட்சமும் உண்டாகும்.

* உயிர் பிரியும் போது பணம் உன்னுடன் வராது. எனவே பணத்தை வைத்து தர்மம் செய்.

* பிறருக்கு செய்த சிறு உதவி கூட, நிச்சயம் ஒரு நாள் உனக்கு பலன் தரும்.

* இளமையில் வறுமையும், முதுமையில் செல்வமும் பெற்றால் துன்பமே மிஞ்சும்.

* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேற எதுவும் உன்னிடம் சேராது.

* வெறும் பானையை அடுப்பில் வைத்தால் பொங்குமா. அதுபோல் நல்லது செய்யாமல் கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன்.

* 'சிவாய நம' என்று தினமும் சொல். இந்த ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் வழியாகும்.

* நீ என்னதான் முயன்றாலும் தகுந்த காலம் கூடினால் மட்டுமே, உன் செயலுக்கு பலன் கிடைக்கும்.

* முற்பிறவியில் செய்த புண்ணியத்திற்கு ஏற்பவே, தற்போது உன்னிடம் செல்வம் உள்ளது.

* நல்ல குணமுள்ள மனைவி அமைந்து விட்டால் உனக்கு வேற எதுவும் தேவையில்லை.

* நீ செய்த புண்ணியத்தின் படியே முயற்சியில் வெற்றி பெறுவாய்.

* பிறருக்கு கிடைக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்தாதே.

* சாப்பிட நாழி அரிசி சோறும், உடுக்க நான்கு முழமும் போதும். ஆனால் நாம் ஆசைப்படுவதோ கோடி விஷயம்.

என்கிறார் அவ்வையார்






      Dinamalar
      Follow us