
* தைரியமாக முன்னேறிச் செல். வெற்றி கிடைத்தே தீரும்.
* லட்சியம் இல்லாதவர் எப்போதும் தவறுகள் செய்வார்.
* ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே உன்னை அர்ப்பணி.
* வெற்றிக்கு தேவை துாய்மை, பொறுமை, விடாமுயற்சி.
* பிறர் என்ன சொன்னாலும் பரவாயில்லை. ஒழுக்கம், பக்தியில் இருந்து நீ விலகாதே.
* பொறுமை இல்லாதவன் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.
* பொறாமையை கைவிடு. மகத்தான செயலை செய்யலாம்.
* நிறையப் பேசுவதை விட, அதில் ஒன்றையாவது செய்.
* எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
* கடலைப் போல ஆழமாக, வானத்தைப் போல பரந்து இருக்கும் இதயமே நமக்கு வேண்டும்.
* கீழ்ப்படியத் தெரிந்தவனுக்கு கட்டளையிடவும் தெரியும்.
* நீ பலமானவன். உனக்குள் தெய்வீக ஆற்றல் உள்ளது.
* உடலையும் மனதையும் பலவீனப்படுத்தும் எதையும் செய்யாதே.
* மனம் ஒருமுகப்படும்போதுதான் அதன் ஆற்றல் அதிகரிக்கும்.
நம்பிக்கை ஊட்டுகிறார் விவேகானந்தர்

