ADDED : ஜூலை 15, 2012 10:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சக்தி தலங்களில் முதன்மையானதாகத் திகழ்வது மதுரை. இங்கு சித்திரை தொடங்கி ஆடிவரை நான்கு மாதம் அம்பிகை பட்டத்தரசியாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்வதாக ஐதீகம். ஆடியில் மீனாட்சியம்மனுக்குரிய தனி விழாவாக முளைக்கொட்டுத் திருவிழா நடக்கும். ஜூலை 20ல் விழா துவங்கி பத்துநாட்கள் நடக்கும். கோயிலுக்குள் இருக்கும் ஆடி வீதியில் மீனாட்சியம்மன் தினமும் வாகனத்தில் பவனி வருவதை தரிசிக்கலாம். விழா நடக்கும் மாதத்தின் பெயரையே இந்த வீதிக்குச் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆடிப்பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் சடங்கு உற்சவம் (பூப்புனித நீராட்டு) நடத்துவர்.

