ADDED : ஜூலை 15, 2012 10:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெய்வத்தின் திருநாமங்களை வரிசைப்படுத்தி அர்ச்சிப்பது அர்ச்சனை. இதில் அம்பிகைக்குரிய ஆயிரம் திருநாமங்களைக் கூறுவது லலிதா சகஸ்ரநாமம். அதில் 'சகஸ்ராக்ஷி' என்ற திருநாமம் உண்டு. இதற்கு 'ஆயிரம் கண் கொண்டவள்' என்று பொருள். கண்ணாத்தாள், ஆயிரம் கண்ணுடையாள், கண்ணுடைய நாயகி, கண்ணாயிரத்தாள் என்று அம்பாளைக் குறிப்பிடுவது இதனால் தான். சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் கண்ணுடையநாயகியாக அருள்புரிகிறாள். உலகம் முழுவதும் நடக்கும் அத்தனை நிகழ்வுக்கும் ஒரே சாட்சியாக இருப்பவள் அம்பிகை என்பதை இப்பெயர் உணர்த்துகிறது. ஞானிகளுக்கு மூளையின் அனைத்து கண்ணறைகளும் திறந்திருப்பதாலே முக்காலமும் அறியும் சக்தி உண்டாகிறது. சகஸ்ராக்ஷியாக இருக்கும் அம்பிகையே குண்டலினி சக்தியாக இருந்து, மூலக்கனலை எழுப்பி ஞானத்தை வழங்குகிறாள்.

