
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணில் எப்போதும் கருணை இருக்க வேண்டும். இதைத்தான் 'கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம்' என்பர். அதனால்தான் அம்பிகையின் பெயர் கண்ணோடு தொடர்புடையதாக உள்ளது. 51 சக்திதலங்களில் மதுரை, காஞ்சிபுரம், காசி என மூன்றை மட்டும் தனியாக குறிப்பிடுவர். இங்கு மட்டும் அம்பிகையின் பெயர் கண்ணோடு தொடர்புடையதாக இருக்கும்.
மதுரை மீனாட்சி - மீன் தன் குஞ்சுகளை காப்பதுபோல் அம்பிகை உயிர்களை காக்கிறாள்.
காஞ்சிபுரம் காமாட்சி - பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கண்களை உடையவள்.
காசி விசாலாட்சி - தன் அகன்ற விழிகளால் பக்தர்களை காக்கிறாள்.